இரு வாரத்தில் சுமார் நான்கு இலட்சம் மக்களை விசேட அடையாள அட்டை பெற வேண்டும் என யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவம் நச்சரித்து வருகின்றது. இது தொடர்பாக மக்களுக்ககு எச்சரிக்கையுடன் கூடிய வற்புறத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப அட்டை பெறவேண்டும் என இராணுவம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சுமார் நூறு ரூபா வரை செலவிட்டு குடும்ப அட்டை பெற்று வருகின்றனர். அந்த நடவடிக்கை முடியும் முன்னர் மீண்டும் விசேட அடையாள அட்டையை பெற வெண்டும் என இராணுவத்தினர் பணித்துள்ளார்கள்.
தொழில் இழந்து சிரமப்பட்டுக் கொண்டு அரச நிவாரணத்திற்க்கு கையேந்தி நிற்கும் மக்களைத் தொடர்ந்தும் பணச்செலவு செய்ய இராணுவம் தூண்டி வருவதானது மனிதாபிமானமற்ற் செயல் எனப் பலரும் கூறுகின்றார்கள்.
Friday, August 31, 2007
ஹென்றியரசர் நூற்றாண்டு விழா போட்டி: ஏழாலை ஞான முருகன் அணி வெற்றி
யாழ்ப்பாணம் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக இளவாலை யங் கென்றிசியன் விளையாட்டுக் கழகம் நடத்திய நூற்றாண்டு விழா நினைவுக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஏழாலை ஞான முருகன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதிப் போட்டியில் ஏழாலை மயிலங்காடு ஞான முருகன் விளையாட்டுக் கழகமும் யாழ்ப்பாணம் பாடும் மீன் விளையாட்டுக் கழகமும் மோதின.
முதல் பாhதி ஆட்டத்தின்போது ஞான முருகன் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப் பெற்ற போதிலும் அதனை மத்தியஸ்தர் பிழையான பக்கத்தில் நின்று பெற்ற கோல் எனத் தெரிவித்து மறுத்தார்.
இந் நிலமையில் முதல் பாதி ஆட்டம் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்
பமாகிய சில நிமிட இடைவேளையில் ஞான முருகன் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப் பெற்று முன்னிலை பெற்றது.இரு அணிகளும் தொடர்ந்து கோல்கள் பெறும் பெரு முயற்சியில் ஈடுபட்ட போதிலும் கோல்கள் எதனையும் பெறவில்லை. ஞான முருகன் விளையாட்டுக் கழகம் 01 - 00 என்ற கோல்கணக்கி;ல் வெற்றிபெற்று சம்பியனாகியது. நூற்றாண்டு விழா சுற்றுக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.
Wednesday, August 29, 2007
பாழ்பட்டுப் போகின்றது யாழ்ப்பாணம்: இராணுவ உதிவியுடன் தறிக்கப்படும் மரங்கள்
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி ஓரங்களில் உள்ள பழைமை வாய்ந்த மரங்கள் தறித்து எடுத்துச் செல்லப்படுகின்றன. கடந்த சில நாட்களாக இந் நடவடிக்கையில் இராணுவத்தினருடன் இனைந்து இயங்கும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலத்தில் வீதியோரத்தில் உள்ள மரங்களின் கொப்புகள், வீட்டு வேலிகள் மற்றும் வீட்டு வளிவுகளில் உள்ள மரங்கள் எனப் பல பயன்தரு மரங்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இராணுவத்தினரின் பணிப்பின் பேரில் வெட்டப்பட்டன. அவைபோக எஞ்சியிருந்த வீதியோர மரங்களும் தற்போது தறிக்கப்படுகின்றன.
சுமார் 75 வருடங்களாக இந்த வீதியால் செல்வோருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்த மரங்களே தறித்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்தப் பழமையான இதனை தறிக்கப்படுவதைப் பல அரச உயர் அதிகாரிகள் பார்த்துக் கொண்டு செல்கின்றனர். எனினும் யாரும் அதற்கெதிராக நடவடிக்கையெடுக்காத பொறுப்பற்ற நிலமையே காணப்புடுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
இது சம்பந்தமாக பொது அமைப்புகள் உரிய அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ள போதிலும் அதற்கு யாரும் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினருடன் இனைந்து குறிப்பி;ட்ட சிலர் பெறுமதிமிக்க மரங்களை தறித்து எடுத்துச் செல்வதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பான அதிகாரிகளும் உடந்தை என்று பொது அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

சிறுவனை நாய் கடித்த விவகாரம்: நீதிமன்றம் வரை சென்றுள்ளது
மலசலகூடத்தை பார்வையிட வீட்டிற்கு வந்த பொது சுகாதர பரிசோதகரை பாதுகாப்பாக வீதியைக் கடந்து விட்டு வந்த பத்து வயது சிறுவனை ஆத்திர முற்ற நாய் கடித்து குதறிய சம்பவம் தெல்லிப்பழைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் வீடிற்கு அருகிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் வீதியில் நின்று போய் வருபவர்களைக் கடித்தும் விரட்டியும் வருவது வழமை. தமது வீட்டிற்கு வந்த காரணமாக பொது சுகாதார பரிசோதகரை அந்த நாய் கடித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் வீட்டிற்க்கு வெளியே வந்து நாயைக் கடந்து அவர் செல்ல குறிப்பிட்ட சிறுவன் உதவி செய்துள்ளான்.
இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த நாய் சிறுவன் திரும்பி வீட்டிற்க்கு வந்தபோது அவனைத் துரத்திக் கடித்துக் குதறியுள்ளது. சிறுவன் உடலின் பல இடங்களிலும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குறிப்பிட்ட விவகாரம் பொலிசாரின் மூலம் நீதிமன்றத்திற்;கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Friday, August 24, 2007
குடும்பப் பதிவை விரைவுபடுத்தும் முயற்சியில் இராணுவம்
யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடும்பப் பதிவை உடன் மேற்கொள்ளும்படி உடுவில் பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்துள்ளார்கள். நேற்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் இராணுவத்தினர் இந்த அறிவித்தலை விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சில நாட்களாக இந்த குடும்பப் பதிவு நடவடிக்கைகள் பரவலாக யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் பணிப்பின் பெயரில் கிராம அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போதுதான் முதல் தடவையாக ஒலி பெருக்கி மூலம் படைத்தரப்பினர் இந்த குடும்பப் பதிவு சம்பந்தமான அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அறிவித்தல் காரணமாக பொது மக்களிடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இராணுவ வாகண விபத்து: இருவர் வைத்திய சாலையில்
இன்று காலை இராணுவ வாகணமும் உந்துருளியம்; மோதிக்கொண்டதில் உந்துருளியில் வந்த இருவர் காயங்களுக்கு உள்ளாகினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
காங்கேசன்துறை வீதி, சபாபதிப்பிள்ளை முகாம் வீதிக்கு அருகாமையில் காலை 7.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. அவ்வழியால் வந்த அரச வாகனம் ஒன்றை மறித்த இராணுவத்தினர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி தெரிவித்து விட்டுச் சென்றுவிட்டார்கள்.
இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கையினால் குறிப்பி;ட்ட சாரதி மிகவும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார். காயங்களுக்கு உள்ளாகியவர்களுக்கு எதாவது நடந்தால் பொறுப்பக் கூறும் நிலைமை தனக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் சற்றுப் பயந்த சாரதி, பின்னர் அவர்களை வைத்தியசாலையில் சேர்த்தார்.

Thursday, August 23, 2007
காவல்துறையால் குடும்பப் பதிவுகள் சேகரிப்பு
யாழ்ப்பாணத்தில் வாழும் அனைத்து மக்களினதும் குடும்பப் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் யாழ். மாவட்ட காவல்துறையினரும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். கிராம அலுவலர் பிரிவு ரிதியாக விவரங்களைப் பதியும் நடவடிக்கை கிராம அலுவலர்களினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது சம்பந்தமான மாதிரிப் படிவங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாகக் குறிப்பிட்ட பகுதிக் காவல்துறையினரால் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் காவல்துறையினர் நேரடியாகக் கிராம அலுவலர்களை அழைத்து இது சம்பந்தமான விபரங்களை வழங்கி பதிவு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்கள்.
இராணுவத்தினரால் புகைப்படங்களுடன் கூடிய குடும்பப் பதிவுகள் மேற்க்கொள்ளப்பட்டு வரும் நிலமையில் காவல்துறையினரும் இந்தப் பதிவுகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த காலத்தில் காவல்துறையினர் இந்தப் பதிவுகளை சேகரித்த போதிலும் இடையில் இந்தப் பணிகளை நிறுத்தியிருந்தார்கள்.
யாழ். குடாநாட்டில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையில் இத்தகைய பதிவுகளைப் பலரும் சேகரிப்பதையிட்டு பொது மக்களிடத்தில் பலத்த சந்தேகங்கள் தோன்றியுள்ளன.

யாழ். குடாநாட்டில் மீண்டும் விசேட அடையாள அட்டை
யாழ். குடாநாட்டு மக்களுக்கு இராணுவத்தினரால் மீண்டும் விசேட அடையள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட படைகளின் உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் இடையே பலாலி படைத்தளத்தில் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் படையினர் 1996ம் ஆண்டு கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு வசித்த மக்களுக்கு விசேட அடயாள அட்டைகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், முதியவர்கள என்ற வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
தற்போது மிண்டும் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புதிய விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும்..
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்க்கும் இடையே இடம்பெற்ற சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் படி பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் ஆகியோர் கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

அமைச்சர் வருகையால் நல்லூர் ஆலய சுற்றாடலில் பதற்றம்
இலங்கை அரசின் சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சரும் ஈபிடிபி கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு மேற்கொண்ட விஜயம் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்றமான நிலைமை காணப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த hநல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்தார். அதையொட்டி பாதுகாப்புக் கெடுபிடிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆலயத்திற்கு வருதை தந்திருந்த அடியவாகள் படைத்தரப்பினராலும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களினாலும் பலத்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
ஆலயச் சுற்றாடலில் உந்துருளிகளில் வந்தவர்கள் சோதனையென்ற பெயரில் அடியார்களை பலத்த கேள்விகளுக்கு உள்ளாக்கியதுடன் குறிப்பி;ட இடங்களில் நின்று வழிபடவும் அனுமதிக்காது விரட்டியுள்ளார்கள். இத்துடன் தேசிய அடையாள அட்டைகள் கேட்டும் தாம் பயமுறுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதேவேளை பலத்த பாதகாப்புடன் ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சரின் கவச வாகனம் வீதித் தடைக்கு தொண்டர்கள் போட்டு இருந்த பாதுகாப்பு நிலைகளையும் உடைத்துக் கொண்டு உட்சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய செயல்பாடுகளினால் ஆலய சுற்றாடலில் பெரும் பதற்றமான நிலமை ஏற்பட்டது.

வலி. வடக்கில் தொடரும் இராணுவத்தினரின் பதற்றம்
யாழ்ப்பாணம், வலி. வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பதற்றமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். நேற்றைய தினம் பலாலி காங்கேசன்தறை மற்றும் மியிலிட்டிப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்த செல்களினால் இந்தப் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் நேற்றைய தினம் பாலாலி படைத்தளத்தினுள் செல்கள் வீழ்ந்து வெடித்ததைத் தொடாந்து உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் உடனடியாகக் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். க.பொ.த உயர்தரப் பரிட்சை இடம் பெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் இராணுவத்தினர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டமையால மாணவர்களின் கல்வி பாதிக்கும் துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டுள்ளது.
இதனைவிட நேற்றைய தினம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர், வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை மறித்துச் சோதனைகளை மேற்கொண்டனர். அடையாள அட்டைகளையும் பார்வையிட்டனர். தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய உற்சவம் முடிவடைந்து வீடகளுக்குத் திரும்பிய பக்தர்களிடமும் இராணுவத்தினா அடையாள அட்டைகளை கேட்டு சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டமையால் அவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளானார்கள்.

Tuesday, August 21, 2007
செல் சத்தத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம்
செல் சத்தத்தினால் இன்று காலை யாழ். குடாநாடு கடும் அதிhவுக்கு உள்ளாகியது. வுன்னியில் உள்ள புலிகளின் பகுதியில் இருந்து ஏவப்பட்ட செல்கள் பலாலி படைத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததைத் தொடாந்து இந்த தாக்குதலை படைத் தரப்பினர் நடத்தினர்.
நூற்றுக்கணக்கில் வன்னியை நோக்கி செல்கள் ஏவப்பட்டன. காலை 8.45 மணியளவில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி இராணுவ முகாம் பகுதியில் திடீரென செல்கள் வீழ்ந்து வெடித்தன. எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
வன்னியில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சுமார் அரை மணித்தியாலங்களுக்கு மேலாக யாழ். குடாநாட்டில் இருந்து செல்கள் வன்னி நோக்கிப் பறந்தன. பலாலியில் இருந்து ஆட்லெறி மற்றும் பல் குழல் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்றன. அது தவிர ஊரெழு தெல்லிப்பழை உடுவில் தென்மராட்சி முகாம்கள் வடமராட்சி முகாம்கள் என பல இடங்களில் இருந்தும் ஆட்லெறி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இருந்து பல்குழல் பீரங்கித்தாக்குதலும் இடம் பெற்றமையால் பொதுமக்கள் பெரும் பதற்றமடைந்தனர்.
இதேவேளை பலாலி படைத்தளத்தில் வீழ்ந்து வெடித்த செல்களினால் படைத்தரப்பினருக்குக் காயங்கள் எற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

Monday, August 20, 2007
ஒட்டுக்குழுவினர் சுட்டதில் வேலணை வர்த்தகர் பலி!
படையினருடன் செயல்படும் ஒட்டுக்குழுவினரின் துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் ஒருவர் பலியாகியுள்ளார். நன்பகல் 12.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
வேனையைச் சேர்ந்த வர்த்தகரான கார்திகேசு இராஜரெட்னம் (53) என்பவரே பலியானவராவார். இவர் தனது வர்த்தக நிலையத்தில் கடமையில் இருந்தவேளை இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம்; மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவேளையில் கடற்படையினர் நடமாட்டம் மற்றும் காவல் நடவடிக்கைகள் அப்பகுதியில் காணப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் மிகவும் சுதந்திரமான முறையில் கடற்படையினரின் முகாம் நோக்கிச் சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மிகவும் இறுக்கமான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ள கடற்படைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தக் கொலையை ஈ.பி.டி.பி. மற்றும் கடற்படையினர் ஆகியோரே செய்யமுடியும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஊர்காவற்துறைப் பொலிசார் உடன் விகாரனையை மேற்கொண்டுள்ளதுடன் குறிப்பட்ட இடத்திற்க்குச் சென்ற ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி மரண விசாரனையை மேற் கொண்டார். அதைத் தொடாந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்துறைப் பொலிசாரினால் ஓப்படைக்கப்பட்டது.

Friday, August 17, 2007
சிறுவன் கடத்தல்
மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவப் புலனாய்வாளர்கள் வீட்டில் இருந்த பதினான்கு வயதுச் சிறுவனைக் கடத்திச் சென்றுள்ள சம்பவம் உரும்பிராய்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கடத்தப்பட்ட மாணவன் உரும்பிராய் கற்பகப் பிளளையார் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் உரும்பிராய் சைவத் திமிழ் வித்தியாலயத்தில் ஆண்டு 08இல் கல்வி கற்கும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மாணவனைக் கடத்தியவர்கள் குறிப்பிட்ட வீட்டில் நுழைந்து ஆயுதங்களுடன் தேடுதல் நடத்தியனர் எனவும் கூட்டி வந்தவரிடம் ஏதோ கேட்டுவிட்டு குறிப்பிட்ட சிறுவனைக் கடத்திச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் அமைபுக்களும் கூட வாய் மூடி மௌனிகளாக இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இனம்தொயாதவரின் சடலம் வைத்தியசாலையில்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இனம்தெரியாத ஒருவரின் சடலம் கோப்பாய் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இவர் இனம் தொயாதவர்களின் துப்பாக்கிச்சூட்டிற்கு உள்ளாகியிருக்கலாம் எனத் தெரிவித்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளளது.
தலையில் துப்பாக்கிச்சூட்டுக் காயம் இருந்ததுடன் உடலிலும் காயங்கள் காணப்படுகின்றன. குறிப்பட்டவர் நீலக் கோடு போட்ட சாரம் அணிந்திருந்தார். அது புதிய சாரமாகவும் காணப்படுகின்றது. சிவப்பு கறுப்பு கோடுகளுடன் கூடிய சேட்டும் சடலத்தில் காணப்படுகின்றது.

உரும்பிராயில் ஒருவரைக் காணவில்லை
உரும்பிராய் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 22 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டார் என யாழ். மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அவரது சகோதரியினால் முறையிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்டவர் தென்மராட்சியில் இருந்து வந்து உரும்பிராய் பகுதியில் தங்கியிருந்து மேசன் வேலைக்குச் சென்று வந்தார் எனவும் இவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்பட்டதாக தெரிவிக்கபட்டவர் இ.நிருபன் வயத 22 என அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருவர் மனித உரிமைகள் ஆனைக்குழவில் சரண்
யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று இருவர் சரண் அடைந்துள்ளார்கள். தென்மராட்சி மறவன்புலவில் இருந்து வந்து மேசன் வேலைக்காக உரும்பிராயில் தங்கியிருந்த 23 வயதான இ.கிருஸ்ணகுமார் என்பவரும் மற்றும் 30 வயது நிரம்பிய குடும்பஸ்தர் ஒருவருமே சரணடைந்துள்ளவாகளாவர்.
வியாழக்கிழமை அதிகாலையில் மோட்டார்சைகிளில் வந்த இனம்தெரியாதவர்களினால் விரட்டப்பட்டார் எனவும் தனது தேசிய அடையாள அட்டையை குறிப்பிடவர்கள் எடுத்துச் சென்றவிட்டார்கள் என்பதினாலும் இவர் மனித உரிமைகள் ஆனைக்குழவில் சரணடைந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையானவர் கடந்த வாரம் தச்சன்தோப்பில் இடம்பெற்ற கிளைமோர்த் தாதக்குதலைத் தொடாந்து தாக்கப்பட்டார். அதை அடுத்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய தேசிய அடையாள அட்டையையும் இனம்தெரியாதவர்கள் பறித்துச் சென்றுள்ளமையால் இவர் வைத்தியசாலையில் இருந்து நேரடியாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளார்.

Thursday, August 16, 2007
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரிக்கு முன்னாள் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். குருநகர் இராஜசிங்கம் வீதியைச் சேர்ந்த கே. தேவராசா என்ற யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதரா ஊழியர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவராவார்.
காலையில் வீட்டில் இருந்து கடமைக்கு வரும் வழியில் இவர் மீது மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள். யாழ். மாவட்ட நீதிவான் விசாரனை மேற்கொண்டதைத் தொடாந்து சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிசாரினால் ஒப்படைக்கபட்டது.
இதேநேரம் பகல் 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள சத்திரத்துச்சந்திக்கு அண்மைக் கடை ஊழியர் ஒருவர் மீது இனம் தெரியாதவாகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள் படுகாயமுற்ற நிலையில் யாழ்;பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளவர் சின்னராசா விஜயசிங்கம் 30 வயது வேலனை 06ம் வட்டாரத்தைச் சேர்ந்தவராவார்.

கைதடியில் வீடு தீவைக்கப்பட்டுள்ளது.
கைதடிப் பகுதியில் தனிமையில் வாழந்தவரின் வீடு இன்ற பகல் 11.00 மணியளவில் வீட்டிற்க்கு மோட்டார் சையிக்கிளில் வந்த இனம் தெரியாதவர்களினால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் மனித உரிமைள் ஆனைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டில் ஏற்க்கனவே தனது வீட்டிற்கு ஆயுதங்களுடன் வருகை தந்தவர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து தன்னிடம் நின்ற மோட்டார் சையிக்கிளை திருடிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மனித உரிமைகள் ஆனைக்குழுவில் மூவர் சரண்
கைதடி கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த மூவர் இன்று பகல் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரணடைந்துள்ளார்கள்.
கோப்பாயைச் சேர்ந்த இளம் குடம்பஸதர் ஒருவரும் மற்றும் 30 வயதான கைதடியைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மற்றும் தனிமையில் வாழ்ந்த 48 வயதானவருமே இன்று மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்துள்ளவாகள். ஏற்கனவே இவர்களுடைய வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீடுகளை சோதனையிட்டுவிட்டு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுச் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் மூலம் யாழ் நீதிமன்றில் உரியவர்கள் சமர்ப்பிக்ப்பட்டடு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

தைடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி!
இன்று பகல் தைடியில் இடம் பெற்ற இனம் தெரியாதவாகளின் துப்பாக்கிச் சூட்டில் ஓய்வு பெற்ற கிராம அலுவலர் உட்பட இருவர் பலியாகியுள்ளார்கள்.
இன்று காலையில் கைதடிச்சந்தியில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் தம்பையா சந்திர மோகன் வயது 28 என்பவர் பலியாகியுள்ளார் இவருடைய சடலம் சாவகச்சேரி நீதவானின் விசாரனையைத் தொடாந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. பகல் 11.00 மணியளவில் ஓய்வுபெற்ற கிராம அலுவலரான க.செல்லையா வயது 65 என்பவர் வீட்டில் வைத்து இனம் தெரியாதவாகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியாகியுள்ளார். இவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதடி கிழக்கில் இடம்பெற்ற துப்பர்கிப் பிரயோகத்தில் ஐயதாஸ் ரூபன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகொலை செய்யப்ட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சிவில் உடையில் மோட்டார் சையிக்கிளில் வந்த இராணுவப் புலனாய்வாளர்கள் நால்வர் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள இந்த சம்பவங்கள் இடம்பெற்ற வேளையில் இந்தப் பகுதியில் இராணுவத்தினரின் நடமாட்டம் காணப்பட்டதாகும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to:
Posts (Atom)