இன்று பகல் தைடியில் இடம் பெற்ற இனம் தெரியாதவாகளின் துப்பாக்கிச் சூட்டில் ஓய்வு பெற்ற கிராம அலுவலர் உட்பட இருவர் பலியாகியுள்ளார்கள்.
இன்று காலையில் கைதடிச்சந்தியில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் தம்பையா சந்திர மோகன் வயது 28 என்பவர் பலியாகியுள்ளார் இவருடைய சடலம் சாவகச்சேரி நீதவானின் விசாரனையைத் தொடாந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. பகல் 11.00 மணியளவில் ஓய்வுபெற்ற கிராம அலுவலரான க.செல்லையா வயது 65 என்பவர் வீட்டில் வைத்து இனம் தெரியாதவாகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியாகியுள்ளார். இவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதடி கிழக்கில் இடம்பெற்ற துப்பர்கிப் பிரயோகத்தில் ஐயதாஸ் ரூபன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகொலை செய்யப்ட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சிவில் உடையில் மோட்டார் சையிக்கிளில் வந்த இராணுவப் புலனாய்வாளர்கள் நால்வர் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள இந்த சம்பவங்கள் இடம்பெற்ற வேளையில் இந்தப் பகுதியில் இராணுவத்தினரின் நடமாட்டம் காணப்பட்டதாகும் தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment