இலங்கை அரசின் சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சரும் ஈபிடிபி கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு மேற்கொண்ட விஜயம் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்றமான நிலைமை காணப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த hநல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்தார். அதையொட்டி பாதுகாப்புக் கெடுபிடிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆலயத்திற்கு வருதை தந்திருந்த அடியவாகள் படைத்தரப்பினராலும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களினாலும் பலத்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
ஆலயச் சுற்றாடலில் உந்துருளிகளில் வந்தவர்கள் சோதனையென்ற பெயரில் அடியார்களை பலத்த கேள்விகளுக்கு உள்ளாக்கியதுடன் குறிப்பி;ட இடங்களில் நின்று வழிபடவும் அனுமதிக்காது விரட்டியுள்ளார்கள். இத்துடன் தேசிய அடையாள அட்டைகள் கேட்டும் தாம் பயமுறுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதேவேளை பலத்த பாதகாப்புடன் ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சரின் கவச வாகனம் வீதித் தடைக்கு தொண்டர்கள் போட்டு இருந்த பாதுகாப்பு நிலைகளையும் உடைத்துக் கொண்டு உட்சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய செயல்பாடுகளினால் ஆலய சுற்றாடலில் பெரும் பதற்றமான நிலமை ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment