படையினருடன் செயல்படும் ஒட்டுக்குழுவினரின் துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் ஒருவர் பலியாகியுள்ளார். நன்பகல் 12.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
வேனையைச் சேர்ந்த வர்த்தகரான கார்திகேசு இராஜரெட்னம் (53) என்பவரே பலியானவராவார். இவர் தனது வர்த்தக நிலையத்தில் கடமையில் இருந்தவேளை இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம்; மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவேளையில் கடற்படையினர் நடமாட்டம் மற்றும் காவல் நடவடிக்கைகள் அப்பகுதியில் காணப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் மிகவும் சுதந்திரமான முறையில் கடற்படையினரின் முகாம் நோக்கிச் சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மிகவும் இறுக்கமான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ள கடற்படைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தக் கொலையை ஈ.பி.டி.பி. மற்றும் கடற்படையினர் ஆகியோரே செய்யமுடியும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஊர்காவற்துறைப் பொலிசார் உடன் விகாரனையை மேற்கொண்டுள்ளதுடன் குறிப்பட்ட இடத்திற்க்குச் சென்ற ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி மரண விசாரனையை மேற் கொண்டார். அதைத் தொடாந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்துறைப் பொலிசாரினால் ஓப்படைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment