Thursday, August 23, 2007

வலி. வடக்கில் தொடரும் இராணுவத்தினரின் பதற்றம்

யாழ்ப்பாணம், வலி. வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பதற்றமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். நேற்றைய தினம் பலாலி காங்கேசன்தறை மற்றும் மியிலிட்டிப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்த செல்களினால் இந்தப் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் நேற்றைய தினம் பாலாலி படைத்தளத்தினுள் செல்கள் வீழ்ந்து வெடித்ததைத் தொடாந்து உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் உடனடியாகக் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். க.பொ.த உயர்தரப் பரிட்சை இடம் பெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் இராணுவத்தினர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டமையால மாணவர்களின் கல்வி பாதிக்கும் துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டுள்ளது.

இதனைவிட நேற்றைய தினம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர், வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை மறித்துச் சோதனைகளை மேற்கொண்டனர். அடையாள அட்டைகளையும் பார்வையிட்டனர். தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய உற்சவம் முடிவடைந்து வீடகளுக்குத் திரும்பிய பக்தர்களிடமும் இராணுவத்தினா அடையாள அட்டைகளை கேட்டு சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டமையால் அவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளானார்கள்.

No comments: