Thursday, August 23, 2007

யாழ். குடாநாட்டில் மீண்டும் விசேட அடையாள அட்டை

யாழ். குடாநாட்டு மக்களுக்கு இராணுவத்தினரால் மீண்டும் விசேட அடையள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட படைகளின் உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் இடையே பலாலி படைத்தளத்தில் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைப் படையினர் 1996ம் ஆண்டு கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு வசித்த மக்களுக்கு விசேட அடயாள அட்டைகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், முதியவர்கள என்ற வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தற்போது மிண்டும் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புதிய விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும்..
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்க்கும் இடையே இடம்பெற்ற சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் படி பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் ஆகியோர் கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

No comments: