Friday, August 24, 2007

குடும்பப் பதிவை விரைவுபடுத்தும் முயற்சியில் இராணுவம்

யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடும்பப் பதிவை உடன் மேற்கொள்ளும்படி உடுவில் பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்துள்ளார்கள். நேற்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் இராணுவத்தினர் இந்த அறிவித்தலை விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சில நாட்களாக இந்த குடும்பப் பதிவு நடவடிக்கைகள் பரவலாக யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் பணிப்பின் பெயரில் கிராம அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போதுதான் முதல் தடவையாக ஒலி பெருக்கி மூலம் படைத்தரப்பினர் இந்த குடும்பப் பதிவு சம்பந்தமான அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அறிவித்தல் காரணமாக பொது மக்களிடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments: