யாழ்ப்பாணத்தில் வாழும் அனைத்து மக்களினதும் குடும்பப் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் யாழ். மாவட்ட காவல்துறையினரும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். கிராம அலுவலர் பிரிவு ரிதியாக விவரங்களைப் பதியும் நடவடிக்கை கிராம அலுவலர்களினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது சம்பந்தமான மாதிரிப் படிவங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாகக் குறிப்பிட்ட பகுதிக் காவல்துறையினரால் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் காவல்துறையினர் நேரடியாகக் கிராம அலுவலர்களை அழைத்து இது சம்பந்தமான விபரங்களை வழங்கி பதிவு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்கள்.
இராணுவத்தினரால் புகைப்படங்களுடன் கூடிய குடும்பப் பதிவுகள் மேற்க்கொள்ளப்பட்டு வரும் நிலமையில் காவல்துறையினரும் இந்தப் பதிவுகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த காலத்தில் காவல்துறையினர் இந்தப் பதிவுகளை சேகரித்த போதிலும் இடையில் இந்தப் பணிகளை நிறுத்தியிருந்தார்கள்.
யாழ். குடாநாட்டில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையில் இத்தகைய பதிவுகளைப் பலரும் சேகரிப்பதையிட்டு பொது மக்களிடத்தில் பலத்த சந்தேகங்கள் தோன்றியுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment