உரும்பிராய் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 22 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டார் என யாழ். மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அவரது சகோதரியினால் முறையிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்டவர் தென்மராட்சியில் இருந்து வந்து உரும்பிராய் பகுதியில் தங்கியிருந்து மேசன் வேலைக்குச் சென்று வந்தார் எனவும் இவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்பட்டதாக தெரிவிக்கபட்டவர் இ.நிருபன் வயத 22 என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment