யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரிக்கு முன்னாள் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். குருநகர் இராஜசிங்கம் வீதியைச் சேர்ந்த கே. தேவராசா என்ற யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதரா ஊழியர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவராவார்.
காலையில் வீட்டில் இருந்து கடமைக்கு வரும் வழியில் இவர் மீது மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள். யாழ். மாவட்ட நீதிவான் விசாரனை மேற்கொண்டதைத் தொடாந்து சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிசாரினால் ஒப்படைக்கபட்டது.
இதேநேரம் பகல் 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள சத்திரத்துச்சந்திக்கு அண்மைக் கடை ஊழியர் ஒருவர் மீது இனம் தெரியாதவாகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள் படுகாயமுற்ற நிலையில் யாழ்;பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளவர் சின்னராசா விஜயசிங்கம் 30 வயது வேலனை 06ம் வட்டாரத்தைச் சேர்ந்தவராவார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment