நீண்ட கால இடைவெளியின் பின்னர் சுன்னாகம் கந்தரோடை சவாரித்திடலில் மாட்டு வண்டி சவாரி இடம்பெற்றுள்ளன. ஆளவவெட்டி மேற்கு கலைமகள் சன சமூக நிலையத்தின் எற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சவாரி மாடுகள் கலந்துகொண்டன. 'சி' பிரிவில் 11 வண்டில்களும் 'பி' பிரிவில் 14 வண்டில்களும் 'எ' பிரிவில் 08 வண்டில்களுமாக மொத்தம் 33 வண்டிகள் கலந்து கொண்டன.
'சி' பிரிவில் 1ம் இடத்தை மல்
லாகத்தைச் சேர்ந்த சிறிலக்சனும் 2ம் இடத்தை புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த ராஜ்கினும் 3ம் இடத்தை மானிப்பாயைச் சேர்ந்த செல்வரத்தினமும் பெற்றுக் கொண்டார்கள்.'பி' பிரிவில் முதலாம் இடத்தை மாதகல் பிரான்பற்றைச் சேர்ந்த ஆனந்தராசாவும் 2ம் இடத்தை அளவெட்டியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளையும் 3ம் இடத்தை திருநெல்வேலியைச் சேர்ந்த சசிகுமாரும் பெற்றுக் கொண்டார்கள்.
'எ' பிரிவில் 1ம் இடத்தை அளவெட்டியைச் சேர்ந்த சிவஞானமும் 2ம் இடத்தை அச்செழுவைச்சேர்ந்த செல்வரத்தினமும் 3ம் இடத்தை வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகாலிங்கமும் பெற்றுக்கொண்டார்கள்.
இப் போட்டிகள் சனசமூக நிலையத் தலைவர் க.உதயகுமார் தலைமையில் இடம் பெற்றன.
No comments:
Post a Comment