Wednesday, September 5, 2007

ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் வெற்றி

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற ஜந்து பேர் பங்கு பற்றும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏழாலை ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வுட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் 75வது நிறைவு விழாவையொட்டி இடம் பெற்ற பவள விழா நிகழ்வுக்காக இந்த உதைபந்தாட்டப் போட்டி முதல் தடவையாக நடத்தப்பட்டது
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கைச் சேர்ந்த ஏழாலை மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகமும் மானிப்பாய் றெட்றேஞ்சர் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.


முதல் பாதி ஆட்ட நிறைவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றன. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடாந்து இரு அணிகளும் விடாமுயற்சியுடன் விளையாடியதன் மூலம் இரு ஆணிகளும் மாறி மாறி கோல்களைப் பெற்று மேலும் மூன்று கோல்களைப் பெற்று தலா நாலு கோலகள் என்ற நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது.


வெற்றி தோல்வியை திர்மானிப்பதற்காக மேலும் பத்து நிமிடங்கள் வழங்கப்பட்ட போதிலும் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை. இந் நிலமையில் சம நிலை உடைப்பு உதைகள் மூன்று வழங்கப்பட்டன.


இதில் ஞானமுருகன் விளையாட்டக் கழகம் 03 உதைகளையும் பயன்படுத்தி கோல்களைப் பேற்றுக் கொண்ட போதிலும் றெட் றேஞ்சர் விளையாட்டக்கழக வீரர் ஒரு உதையை வீணாக்கியமையால ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் 07க்கு 05 என்ற கோல்களினால் வெற்றி பெற்று பவள விழாக் கிண்ணத்தை சுவீகரித்தது.


யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

No comments: