திருட்டு மின்சாரம் பெற்ற ஒன்பது பேரிடம் இருந்து தண்டப் பணமாக ஒரு லட்சத்தி முப்பத்தையாயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளது மல்லாகம் நீதிமன்றம். தண்டம் கட்டத் தவறியவர்களுக்கு ஒருவருக்கு ஆறு மாதகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இரவு காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் திருட்டு மின்சாரம் பெற்றவர்களைக் கண்டுபிடித்து மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் நிறுத்தினர். சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து பத்துப் பேருக்கும் தலா பதினைந்தாயிரம் ரூபா தண்டமாக விதிக்கப்பட்டது. பணத்தை கட்டத் தவறின் ஆறு மாதகால சிறைத் தண்டனையெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சுன்னாகத்தை சேர்ந்த கண்ணன் துரைihசா, அகஸ்ரின் யோகநாதன், நாகலிங்கம் பாலகிருஸ்னன், கந்தையா இராசதுரை, கந்தசாமி சுரேஸ்குமார், கிருஸ்ணபிள்ளை சிவகுமார், மாரிமுத்து யோகராசா மற்றும் பெண்களான திருமதிகள் வரதராஜா வரதராணி, சிவஞானம் றெஜினாமணி ஆகியோர் தண்டப் பணத்தை செலுத்தினர். நாமுத்து இரத்தினசிங்கம் குறிப்பிட்ட பணத்தைக் கட்டத் தவறியமையால் ஆறு மாத சிறைத் தண்டனைக்காக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment