நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. யாழ். குடாநாட்டில் கடந்த பல மாதங்களாகக் காணப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்றைய தினம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து; மக்கள் நேரத்துடன் ஆலயத்திற்க்கு வந்து திருவிழாவில் கலந்துகொண்டார்கள்.
அதிகாலையில் இடம்பெற்ற பள்ளியறைப் பூசையைத் தொடர்ந்து காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து 7.00 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தார். பக்தர்களின் பலத்த வேண்டுதல்களுக்கு மத்தியில் அடியார்களினால் தேர் இழுக்கப்பட்டது.
குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முச்சக்கர வண்டிகள் யாழ்ப்பாணம் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள், சிற்றூர்திகள், என்பன காலை முதல் சேவையில் ஈடுபட்டு இருந்தன. தொடாச்சியாக அடியவர்கள் வருகை தந்து உடன் ஆலய சுற்றாடலில் இருந்தும் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றதையும் அவதானிகக முடிந்தது.
ஆலயத்தில் பல நூற்றுக்ககணக்கானவர்கள் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டதுடன் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நீணட ஆயுள் வெண்டி நேர்த்திகளை நிறை வேற்றியதையும் காணமுடிந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment