கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டு மக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கவதற்கான நடவடிக்கைகளில் யாழ். மாவட்ட படைகள் மும்மரமாக ஈடுபட்டு வந்தன. தற்போது இந்த விசேட அடையாள அட்டையை வழங்குவதில் படைத்தரப்புக்கு இடையே பெரும் குழப்பமான நிலமை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டதில் நிலை கொண்டுள்ள படையணிகள் பலவும் தக்கு தெரிந்தவாறு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் ஒரு கட்டமைப்பு அற்ற நிலமை காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்தாக தெரியவருகின்றது.
இதேவேளை ஏற்கனவே பல லட்சக்கணக்கான மக்கள் புகைப்படங்கள் எடுத்து இராணுவ முகாம்களில் பல மணித்தியாலங்கள் காத்திருந்து புகைப்படங்களை கையளித்தவிட்டு வந்துள்ளார்கள். இவர்களுக்குக் குறிப்பி;ட்ட விசேட அடையாள அட்டைக்கான படிவங்கள் வழங்கப்பட்டமைக்கான எந்தவொரு அத்தாட்சிக் கடிதங்களும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment