Friday, September 7, 2007

மீண்டும் மீண்டும் கசிப்பு விற்றவர் சிறையில்

கசிப்பு விற்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு தண்டப்பணம் கட்டிய மூன்றே மணிநேரத்தில் மீண்டும் குறிப்பிட்ட நபர் ஒருவரும் மற்றும் இருவரும் பெரும் தொகையான கசிப்பை ஆட்டோவில் எடுத்துச் சென்றபோது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கசிப்பு விற்ற குற்றச்சாட்டில் அச்சுவேலியைச் சேர்ந்தவரான மயில் வாகணம் ஞானசேகரன் என்பவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் மாவட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் 15 ஆயிரம் ரூபா தண்டமாக கட்டிவிட்டுச் சென்றார்.

நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய சுமார் மூன்று மணிநேரத்தில் மேலும் இரண்டு நபர்களுடன் இனைந்து 45 போத்தில் கசிப்பை ஆட்டோவில் எடுத்துச்சென்ற போது சுன்னாகம் பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டு மல்லாகம் மாவட்ட நிதிமன்ற நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். குற்றத்தை மூவரும் ஒப்புக் கொண்டார்கள்.

இதனைத் தொடாந்து 1ம் 3ம் குற்றவாளிகளான அச்சுவேலியைச் சண்முகம் ஸ்ரீதர், அன்னராசா குணேஸ்வரன் ஆகியோருக்கு 40 ஆயிரம் ருபா தண்டம் அல்லது 15 மாதா சிறைத்தண்டனையும் மற்றைய 2ம் குற்றவாளிக்கு 70 அயிரம் ரூபா தண்டம் அல்லது 21 மாத சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

குறிப்பி;ட மூவரும் உரிய தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

No comments: