Saturday, September 15, 2007

வீடுகளில் அத்து மிறிப் பிரவேசிக்கும் படையினர்

சுன்னாகம் பகுதிகளில் இரவு நேரத்தில் படையினர் வீடுகளுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து வருகின்றனர் என அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டின் பூட்டிய கதவுகளை உடைத்தும் மற்றும் மதில்களின் மேலாகப் பாய்ந்தும் வரும் இராணுவத்தினரால் இருவு நேரத்தில் பொது மக்கள் அச்சத்துடனேயே வாழும் நிலைமை காணப்படுகின்றது.
இவர்கள் இரவு வேளைகளில் வாகனங்கள் மற்றும் உந்துருளிகளைப் பொதுமக்களிடமிருந்து கேட்கின்றனர் எனவும் கொடுக்க மறுப்பவர்களைப் பயமுறுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. புடையினரின் இவ்வாறான நடவடிக்கைகளினால் திருடர்களும் விடுகளுக்குள் படையினர் போன்றே நுழைந்து திருடிச் செல்லும் நிலமையும் அதிகரித்திருக்கின்றது.

No comments: