Saturday, September 15, 2007

ஊரடங்கு தளர்வு ஆனால் மக்கள் நடமாட்டம் இல்லை

யாழ். குடாநாட்டுக்கான இரவு நேர ஊரடங்குச் சட்டம் மேலும் மூன்று மணித்தியாலங்களினால் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் குடாநாட்டு மக்கள் இரவு நேரத்தில் நடமாடுவதைத் தவிர்த்து வருகிறார்கள்.

இரவு நேரத்தில் நடமாடினால் வழியில் ஏதாவது நடந்துவிடலாம் என்ற அச்சம் நிலவுவதே இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஆட்கடத்தல்கள், இனம்தெரியாதவர்கள் என்ற பெயரில் இடம்பெறும் கொலைகள் போன்ற காரணங்களினால் மக்கள் இரவில் நடமாடுவதற்கு மக்கள் பயப்படுகின்றனர்.

No comments: