Friday, September 7, 2007

குடிசன மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் குடிசன மதிப்பீடு எடுக்கும் பணிகள் மிகவம் மும்மரமாக முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு ஒழுங்கற்ற முறையில் இந்த செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பி;டத்தக்கதாகும்.கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் பணிகளை முன்னெடுப்பதில் குறிப்பிட்ட சில பிரதேச செயலாளர்கள் உதவி அரசாங்க அதிபர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள நிலமையில் இந்த குடிசன மதிப்பீடு என்பது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் வாழ்வியலை அழிக்கும் நோக்கமாக அரசு இதனை மேற்கொண்டுள்ளதாக பொது அமைப்புகளும் கல்வியளார்களும் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

தமிழ் மக்களுடைய வாழ்வியலை பல்வேறு வழிகளிலும் சிதைத்துவரும் அரசாங்கம் மற்றும் படைத்தரப்பினரும் அரச உயர் அதிகாரிகளும் இந்த படுபாதகமான செயலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முயற்சிக்காக இதனை அவர்கள் இணைந்து மேற்கொள்வதாகப் பலரும் தெரிவிக்கின்றார்கள்.

No comments: