இணுவில் இந்துக் கல்லூரிக்கு நேற்று நள்ளிரவு இனம் தெரியாதவர்கள் தீவைத்துக் கொழுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் இந்த விசமிகளின் நடவடிக்கையினால் பாடசாலை அதிபரின் அலுவலகக் கதவுகள் தீயில் எரிந்துள்ளதுடன் தேநீர் சாலையிலும் தீயிடப்பட்டுள்ளது.ஆனாபோதிலும் இவைகள் முழுமையாக எரியாமையால் பாடசாலை தீயில் இருந்து தப்பியுள்ளது. இதேவேளை பாடசாலையின் அலுமாரிகள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதோடு வாழைத் தோட்டம் வெட்டிச் சரிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸில் அதிபர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் தமது விசாரனையைத் தொடர்ந்து ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தள்ளனர். மேலும் சிலரைத் தேடுவதாதகவும் தெரியவருகின்றது.
குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கலாம் எனப் பலரும் தெரிவிக்கின்றார்கள்.
No comments:
Post a Comment