மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவப் புலனாய்வாளர்கள் வீட்டில் இருந்த பதினான்கு வயதுச் சிறுவனைக் கடத்திச் சென்றுள்ள சம்பவம் உரும்பிராய்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கடத்தப்பட்ட மாணவன் உரும்பிராய் கற்பகப் பிளளையார் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் உரும்பிராய் சைவத் திமிழ் வித்தியாலயத்தில் ஆண்டு 08இல் கல்வி கற்கும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மாணவனைக் கடத்தியவர்கள் குறிப்பிட்ட வீட்டில் நுழைந்து ஆயுதங்களுடன் தேடுதல் நடத்தியனர் எனவும் கூட்டி வந்தவரிடம் ஏதோ கேட்டுவிட்டு குறிப்பிட்ட சிறுவனைக் கடத்திச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் அமைபுக்களும் கூட வாய் மூடி மௌனிகளாக இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment