Friday, August 17, 2007

யாழ்ப்பாணத்தில் இருவர் மனித உரிமைகள் ஆனைக்குழவில் சரண்

யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று இருவர் சரண் அடைந்துள்ளார்கள். தென்மராட்சி மறவன்புலவில் இருந்து வந்து மேசன் வேலைக்காக உரும்பிராயில் தங்கியிருந்த 23 வயதான இ.கிருஸ்ணகுமார் என்பவரும் மற்றும் 30 வயது நிரம்பிய குடும்பஸ்தர் ஒருவருமே சரணடைந்துள்ளவாகளாவர்.

வியாழக்கிழமை அதிகாலையில் மோட்டார்சைகிளில் வந்த இனம்தெரியாதவர்களினால் விரட்டப்பட்டார் எனவும் தனது தேசிய அடையாள அட்டையை குறிப்பிடவர்கள் எடுத்துச் சென்றவிட்டார்கள் என்பதினாலும் இவர் மனித உரிமைகள் ஆனைக்குழவில் சரணடைந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையானவர் கடந்த வாரம் தச்சன்தோப்பில் இடம்பெற்ற கிளைமோர்த் தாதக்குதலைத் தொடாந்து தாக்கப்பட்டார். அதை அடுத்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய தேசிய அடையாள அட்டையையும் இனம்தெரியாதவர்கள் பறித்துச் சென்றுள்ளமையால் இவர் வைத்தியசாலையில் இருந்து நேரடியாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளார்.

No comments: